Saturday, January 5, 2013

காதல் கழிவுகள்

....................................................................................................

காதலில்  கவிழ்வது 
நம் கையில் இல்லை. ஆனால்

காயங்கள்  தருவது, கையோடுதானுண்டு

நீயோ , நானோ
காதலோ , காயமோ 
கவனம்  தேவை ..........!!!
..................................................................................................................................................

அத்தனையும் மறந்தவனாய்

 சுதந்திரக்காற்று  வாங்க 

 மாடிக்கு சென்றவன்  மனதில்,

 சுருக்கென்று  தைத்தது , 

அன்றொருநாள்  பேசுகையில் , 
நாம்  சுட்டிக்காட்டி ரசித்த , 

அதே  சுடரொளி  நட்சத்திரம் ...........!!!
..................................................................................................................................................

..................................................................................................................................................

ஊருறங்கும் காலமதில் , 
உறுதுணையாய்  இருந்தவளோ ,!

உள்ளம் கொண்ட உண்மையதை ,

உடைத்தெறிந்து  பகிர்ந்தமையால் ,

உலகம் ஏதோ  சொல்லுமென்று !
உதறிச்செல்ல முயல்வதென்ன ???

உணர்வதென்று ? , உள்ளவரை 
உள்ளம் உன்வசமென்று ........!!!

..................................................................................................................................................

No comments:

Post a Comment