Thursday, March 24, 2016

Tamil tattoo

திருக்குறள்

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர். #0623

தெளிவுரை

வரும் துன்பத்திற்குத் துன்பப்படாத மன ஊக்கம் உள்ளவர். துன்பத்திற்குத் துன்பம் தருவர்.சாலமன் பாப்பையா
துன்பம் சூழும் போது, துவண்டு போகாதவர்கள் அந்தத் துன்பத்தையே துன்பத்தில் ஆழ்த்தி அதனைத் தோல்வியுறச் செய்வார்கள்.கலைஞர்
துன்பம் வந்த போது அதற்க்காக வருந்திக் கலங்காதவர் அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவார்.மு.வரதராசன்

Wednesday, July 9, 2014

தமிழில் நம்பர் ப்ளேட்

        தமிழ் எண்களை  வாகனங்களில் பதிவு எண்களாக பயன்படுத்தலாம் என சட்டம் இருந்தும் , நமக்கு தமிழில் எண்கள் இருப்பதே தெரியாது என்ற காரணத்தினால் அதை மீட்டு எடுக்க மாற்று யுக்தியோடு  ஒரு சிறு பதிவு ....


..............................................................................................................................................................



போக்குவரத்து நெரிசலில் நின்று கொண்டிருக்கையில் முன்னிருந்த வாகனத்தில் அனைத்து பதிவு எண்களும் தமிழிலேயே எழுதப்பட்டிருந்ததை கண்டுவிட்டு, பின்னால் நின்றுகொண்டிருந்த பேருந்து பயணிகள் இருவர் பேசிக்கொண்டது ...

பயணி 1 :    இதப்பாருங்க சார் ! அநியாயத்துக்கு தமிழ் பற்றாளர 
                          இருப்பாரு போல ! இப்டி  எழுதுன யாருக்கு புரியும்  ?

பயணி 2 :    ஏன் சார் உங்களுக்கு இத வாசிக்கத்தெரியாதா ?

பயணி 1:    சத்தியமா தெரியாது , உங்களுக்கு தெரியமா !!!!

பயணி 2 :    இப்போதான் , கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான்                                             கத்துக்கிட்டேன் .

பயணி 1 :    அதுசரி ! இந்த வயசுக்குமேல இத எங்கிட்டு போய்                                             கத்துக்குறது !  எனக்கெல்லாம் காலேஜ் வர வரைக்கும்                                   இப்படி தமிழ்ல நம்பர்ஸ் இருக்குறதே தெரியாது சார் ...

பயணி 2 :    ஆமங்க! , ஸ்கூல்லயே சொல்லித்தரலன்னா அப்றோம்                                   எப்டி நமக்கு தெரியும்! ..... ம் ....?

பயணி 1:    ஆனா நீங்க எப்படி கத்துக்கிட்டீங்க ??????

பயணி 2:    ஈஸி தான் சார் , கொஞ்சநாளைக்கு முன்னாடி                                                       சவுத்இன்டியா ட்ரிப் போனப்போ தான் பாத்தேன் ,                                             கர்நாடகாலயும், ஆந்திராலயும் கவர்மன்ட் பஸ்லலாம்
                         பின்னாடி நம்பர் பிலேட்ஸ் ஒன்னு அவங்க நம்பர்ஸ்லயும் ,                           இன்னொன்னு இங்கிலிஸ்லயும் இருந்துச்சு .

பயணி 1:     ஓ ! .... இங்கலாம் ரெண்டுமே இங்கிலீஷ் ல தான இருக்கு ?

பயணி 2 :    அதான் சார் பிரச்சனையே !..... நீங்களே சொல்லுங்க                                        இப்போ நம்ம ஊரு பஸ்லயே , நம்பர்ப்லேட்ஸ் ஒன்னு                                        தமிழ் லயும் , இன்னொன்னு இங்கிலிஷ்லயும் இருந்த ,                                    அப்போ நீங்க படிபீங்களா????

பயணி 1:    ஆமா ! .... தமிழ் ல இருக்கது புரியலனா என்ன,                                                       பக்கத்துலையே இங்கிலீஷ்ல இருக்குறத  பாத்து கம்பேர்                             பண்ணி கத்துக்குவேன் .

பயணி 2 :    அவ்ளோவ்தான் தான் சார், ஈஸியா போகப்போக                                                 கொஞ்சநாள்லயே நமக்கு இங்கிலீஷ் நம்பெர்ஸ்அ                                             பாக்காமலேயே தமிழ் நம்பெர்ஸ் மனப்பாடம் ஆய்டும் .

பயணி 1 :    செம ஐடியா சார் , அப்றோம் ஏன் இந்த கவர்மன்ட் இத                                     பன்னால ?
பயணி 2 :    ஹஹா , அவங்க  கவர்மன்ட்டா இருக்குறதுனால தான்                                  சார் பன்னால ......

முதலில் சரியாய் விளங்காமல் யோசித்துவிட்டு , சிறிது  சிந்தித்ததும் , இரண்டாம் பயணி சொன்னதின் உள்ளர்த்தம் புரிந்ததும் ..... ..... அட ஆமா சார் எனக்கூறியவாறே வாய்விட்டு சிரித்தார் ஒன்றாம் பயணி .

தந்தை




தான் எனும் சுயம் விடுத்து,
தன்நலமென்பதை அறவே துறந்து ,
தனதெனக் கொண்டதெல்லாம் தந்து முடித்தும் ,
இயன்றதற்கு மேல் செய்யும் இயல்புடயவர்கள் . ...........

தான் பெற்றெடுத்த சுவடுகள் ஏறுவதர்க்காய்
 படிகளாய் மருவி, கூனியும் பின் குறுகியும்,
உச்சம் தொட உயர்த்திப்பிடித்து ,
உச்சி குளிரும் உத்தமர்களே,
உண்மையில் தந்தைமார்கள் !!!.........

Wednesday, March 19, 2014

Tamil Language Flag ( தமிழ் மொழிக்கொடி )


                                                              தமிழ் மொழிக்கொடி 




…. மேற்கண்ட சின்னமானது நமது பழங்கால மன்னர்களின் காலத்தில் குறிப்பாக ( பாண்டியநாடும், சோழ நாடும் ஒரு குடையின் கீழ் ஆட்சிசெய்யப்பட்ட பொழுது ) பயன்பாட்டில் இருந்த அரசாங்க முத்திரையை ஆதாரமாகக்கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. பாண்டிய மன்னனின் சின்னமான "இரு மீன்களும்" சோழனின் "புலியும்" சேரனின் "வில்லும்" மேலும் பல்லவனின் "காளையும்" முறையே பொறிக்கப்பட்டுள்ளன. நமது மன்னர்களால் பயன்படுத்தப்பட்ட சிறிய வகை குத்துவாளான (கட்டாரி) மற்றும் வளையா நேர் வாழும், தமிழனத்தின் வீரத்தை பறைசாற்றுவதாகவும், நமது பாரம்பரரி தொழிலான உழவுத்தொழிலை குறிக்கும் வகையில் "ஏர் கலப்பையும்" இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இலக்கிய கால சொல்லான "வெண் கொற்றக்குடையின்" கீழ் அனைத்து ராசியங்களும் ஒன்றிணைந்து இருப்பது தமிழர்களின் ஒற்றுமையையும், வலிமையையும் குறிப்பதாக வடிவமைக்கப்பட்டுள்ளது..... நமது முன்னோர்களின் புகழ்மிக்க சின்னங்களை மீடேடுப்போமென சூளுரைப்போம் .

                               தமிழ் மொழிக்கொடி நமது மொழியோடும் வாழ்வியலோடும் தொடர்புடைய நிறங்களை வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது ….. சிகப்பும் மஞ்சளும் தமிழரின் வீரத்தையும் , பண்பாடையும் எடுத்துறைக்கும் வகையிலும் , மேலும் பழைய சோழ , பாண்டிய கொடிகளின் பயன்பாட்டில் இருந்த நிறங்கள் என்பதாலும், பழைய ஈழதேசக்கொடியின் நிறங்களாக பயன்பாட்டில் இருந்ததை நினைவுகூறும் வகையிலும், இக்கொடியின் வர்ணங்கள் , சிகப்பு , மஞ்சள் எனவும், கருப்பு நிறம்
திராவிட(தமிழ்) இனத்தின் நிறமாகவும் மேலும் உலகம் முழுவதும்த்த பரவிக்கிடக்கும் அத்துனை தமிழினமக்களை அடையாளப்படுத்துவதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது, மொழியுணர்வின் பேரிடிமுழக்கமான ” வாழ்க தமிழ் ” எனும் முழக்கம் நடுவே பொறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழரின், தமிழினத்தின் புகழ் இவ்வுலகம் முழுவதும் பரவிட நம் மொழிக்கொடியை உயர்த்திப்புடிப்போம் ..... வாழ்க தமிழ் 


 (( (Yet the flag is under proposal for the approval by the department of tamil devlopment , and It is not in any official use.)))   https://commons.wikimedia.org/wiki/File:Tamil_language_flag.png#.7B.7Bint:filedesc.7D.7D

Facebook Page : https://www.facebook.com/TamilLanguageFlag

Youtube link : https://www.youtube.com/watch?v=DMZoQM2L0WA&list=UUFXOnbTWFHXBPnxXbgEr15A





















Wednesday, April 24, 2013

கையில் வந்து சேர்ந்த வடு


அலுவலகம் முடிந்து வெளியேறி  இறுதிப்படி கடக்கையில் ,
 அடிவயிறு உறுமியது , திடீர் இடியெனப்பசித்தது .... 
பார்வையில் பாறையே   பட்டாலும்  தின்றுவிட தோன்றுகையில் 
எத்தனையோ ஆண்டுகளுக்கு  முன்பு   கடந்து வந்த அதே  ஒலி ,
வயிறோடு சேர்த்து காதுகளையும் கவ்வியது .... 
அது என்னவென்று  ஒலி   வந்த வலி  தேட ,
 கண்ணில்  பட்டதோ தெய்வாதீனமான ஒரு காட்சி,... 

சிறுவயதில் சில்லறைகளை  சேர்த்துக்கொண்டு  ,
ஊர் முழுதும் சுற்றிவிட்டு மாலை நேரங்களில் ,
மிதிவண்டியை மிதித்து மிதித்துக்களைத்திருக்கையில்   ,
மிதமாக பசியாற மினுங்கிநின்ற  ஒலி அது ,.

ஆம்,  தல்லாடித்திரிகின்ற  தள்ளுவண்டிதானது 
வகை வகையாய்  பசியாற  வலி செய்த  வண்டியது ...
நெடுங்காலம்  கண்டிடாத , சிறு கடலை வண்டியது ., 
வேர் கடலை, வறுகடலை , கிழங்கு ,சுண்டல் ,பயறு என
 பல ராகமாய் பல காலம்பசி தீர்த்த வண்டியது ...

எத்தனை நாள் காத்திருந்தேன் , இத்தனையும் தின்று தீர்க்க .!!! ......
கடலை வண்டிஉனை  கண்டவுடன் கடந்த காலம் கண்ணில்வர ,,,
கன்னியோடு கடலை போடும்  காளயனாய் மாறியதே 
கணப்பொழுதில் மறந்தேபோனேன் ...

வண்டியதை அடைந்தவுடன் ,விலை கேட்ட வினாடியே 
பகீரரென்று  தோன்றியது  பன்மடங்கு  விலையேற்றம் ,,,
விலைவாசி ஏற்றத்திற்கு விதிவிலக்கே இல்லையென
சலித்தவாறே தந்தபின்னும் ,  நாட்டின்
பொருளாதார சிக்கல் எண்ணி சிறிதளவு  வருந்திவிட்டு ,
சுற்றும் முற்றும், அருகிலும் தொலைவிலும் முற்றிலுமாய் பார்த்தபின் 
அறிந்த முகம்  கண்ணில்படா அக்கணமே வாங்கிவிட்டேன் ,
என் விருப்ப  அவித்த கடலை ...

சாயம் பல பூசுகின்ற  நாடக மேடைச்சமுதாயத்தில் ,
ஒருகணம் சிறுவனாய் மாறி நின்று
ஆசையாய்  அவித்த கடலை  வாங்கியதை ,
அந்தஸ்து பார்க்கும்  அந்த சில நடிகர்களும்
உடன் பணியாற்றும் உருப்படிகள் எவரேனும் ,

எனை மறந்து எனக்காக நான் செய்த இச்செயலை
இழிச்செயலெனக்கூறி   இகழ்வரோ எனும் அச்சம் ,
 காலைமுதல் பணிசெய்து களைத்திருந்த எனையும் ,
 ஒரே நடையில்  வீடு சேர்த்த , வீராவேஷ  சாயமது ..

வீடு வந்து சேர்ந்தவுடம் ,காத்திருந்த கடன்காரனாய்
கவ்வியிருந்த  அடிவயிறு போட்டது ஒரு பெரும் உறுமல் ,,,
ஆசை ஆசையாய் வாங்கிவந்த அவித்திருந்த 
அக்கடலை நிரப்பத்தொடங்கியது என்  குடலை ,,,

அஹ ஹா !!!!!
என்ன சுவை என்ன சுவை ,
காலம் தாண்டி நின்ற சுவை ,,, 
அந்த வயதில் ஆடித்திரிந்த அத்தனை நினைவுகளும்
அப்படியே வந்துபோனது கடலை உன்  புண்ணியத்தில் ,,,
 நெடு நேரம் அசைபோட்டு சுவைத்தபின்னும் ஓயவில்லை 
 நெடுங்கால ஏக்கமென நீண்டிருந்த எனது நிலை .

இறுதியாய் தீரும் பொழுது இடையே நான்  கண்ட ஒன்று
இடியென மாறியே  அடிவயிரில் பாய்ந்ததென்ன ,,,!!!

சற்று கூர்ந்து பார்த்திடவே சந்தேகமே இல்லாமல்
 சவுக்கடியாய் விழுந்ததென்ன ,,,!!!

பாலகனாய் மாறிநின்று  பசியாற்றிட நினைத்ததற்கு ,
பாதகமாய் வந்து நின்று  ,பசும்  நினைவுகள் கலைந்தென்ன  ,,,!!!

அடேய் கடலைவிட்கும்  கயவா , நயவஞ்சகா !!!
உன்னிடம்  கடலை வாங்கியது தவிர ,என்னபாவம் செய்தேன் உனக்கு !!!... இப்படிச்செய்துவிட்டாயே  டா மகாபாவி !!!! 
எதை என் வாழ்வில்  காணவே கூடாது என்றிருந்தேனோ 
அதையே என் கையில்  தந்து  சென்றுவிட்டாயே  ...
 இந்தப்பாவம் உன்னை சும்மா விடாது ,,,

கடலையின் வடிவில் கபடநாடகம் ஆடிச்சென்ற உன்னை , உன்னை !!! 
ஐயோ  பாவி ,,,
தின்றதனைத்தும் திரண்டு கொண்டு வருகிறதே ...
இந்த காசு உன் உடம்பில் ஒட்டாதென்றெல்லாம்

பித்தனைபோல் பிதற்றி முடித்து  ,,,,
கணம் கொண்ட நெஞ்சத்துடன்  
கசக்கியே  தூக்கியெறிந்தேன் ,,, 

அவன் கடலை மடித்துதந்து சென்ற ,
10ஆம் வகுப்பு கணித வினாத்தாளை ....